பதிவு செய்த நாள்
01
ஆக
2019
02:08
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழாவில், பக்தர்கள் உண்டியலில், 1.93 கோடி ரூபாயும், சிறப்பு தரிசனம் கட்டணமாக, 57 லட்சம் ரூபாயும் என, மொத்தம், 2.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தன.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, 24- - 28 வரை நடந்தது. இதில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசித்தனர். மேலும், விரைவு தரிசனம் செய்ய வசதியாக கோவில் நிர்வாகம், 200 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சிறப்பு கட்டணமாக, 57 லட்சம் ரூபாய் வசூலானது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் (ஜூலை., 30ல்), கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர் பொறுப்பு ஞானசேகரன், உதவி ஆணையர், ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் எண்ணினர்.
இதில், 1 கோடியே, 92 லட்சத்து, 88 ஆயிரத்து, 847 ரூபாய் ரொக்கம், 405 கிராம் தங்கம், 10,813 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த ஆண்டு, ஆடிக்கிருத்திகைக்கு, 2 கோடி ரூபாய் மட்டும் கோவிலுக்கு வருவாய் கிடைத் திருந்தது. தற்போது, 2.50 கோடி ரூபாய் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.