பதிவு செய்த நாள்
01
ஆக
2019
03:08
கடலுார் : மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே.,எஸ்டேட் ராசித்தோட்டதில் உள்ள பிரபாவதி விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகம் இன்று துவங்குகிறது. கடலுார் அடுத்த மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே., எஸ்டேட் ராசித் தோட்டதில் அமைந்துள்ள பிரபாவதி விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகம் இன்று துவங்குகிறது.
இதையோட்டி இன்று (ஆகஸ்ட்., 1ல்) மாலை 5:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை , புண்ணியஹவாசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை 2ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யஹவாசனம், நவாவரண பூஜை, பூர்ணாஹீதி, கடாபி ஷேகம், தீபாராதனை நடக்கிறது. யாகத்திற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் துரைராஜ், கோமதி துரைராஜ், கோல்ராதாகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.