பதிவு செய்த நாள்
26
மார்
2012 
11:03
 
 பந்தலூர் :பந்தலூர் அருகே சேரம்பாடி செக்போஸ்ட் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா கோலாகலமாக நடந்தது. சேரம்பாடி டான்டீ சரக எண் 2க்கு உட்பட்ட செக்போஸ்ட் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 24ம் தேதி மாலை 6.30மணிமுதல் 10.30மணிவரை முதற்கால யாகபூஜை, மண்டப அர்ச்சனை, மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. 25ம் தேதி காலை 7.30மணி முதல் 9 மணிவரை இரண்டாம் கால யாகபூஜை, இரண்டாம் கால பூர்ணாகுதி, தீபாராதனை, யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல் நடந்தது. காலை 9.45மணி முதல் 10.45வரை கணபதி, துர்க்கை, பாலமுருகன், நவக்கிரஹம் மற்றும் முத்து மாரியம்மனுக்கு கும்பிஷேகம் நடந்தது. சரக நடத்துனர் சிங் தலைமை வகித்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் குன்னூர் தியாகராஜா குருக்கள் தலைமையில் நடந்தது. கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, முதுநிலை மேலாளர் ஆலன், தொகுதி மேலாளர் ஜெயராஜ், மேலாளர்கள் சிவகுமார், சம்பத், சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சவுந்தர்ராஜன், கவுன்சிலர்கள் சந்திரன், வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் தர்மகர்த்தா ராஜா, தலைவர் மணிவண்ணன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் நவரத்தினம், துணை தலைவர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.