ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்ட விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. இந்தியாவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவதுமான, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் கோவிலில் தேரோட்ட விழா வரும் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் ஏழாம் தேதி வரை நடக்கிறது. 28ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு ரெங்கநாதர் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேர மண்டபத்தை அடைகிறார். பிறகு அங்கிருந்து புறப்படும் ரெங்கநாதர் உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். வரும் 30ம் தேதி ஜீயபுரத்திலும், இரண்டாம் தேதி உறையூரிலும் ரெங்கநாதர் எழுந்தருள்கிறார். வரும் ஆறாம் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது.