ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2019 11:08
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 25ல் கொடியேற்றத்துடன் ஆடி திருக்கல்யாண விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. இதற்காக திருக்கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகினார். தொடர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க அம்மனுக்கு கோயில் குருக்கள் தீபாராதனை காண்பித்தனர். இதையடுத்து அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.