பதிவு செய்த நாள்
02
ஆக
2019
02:08
நகரி:காளஹஸ்தி கோவில் உண்டியலில், 32 நாட்களில், 1.55 கோடி ரூபாய் காணிக்கையாக, பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.
சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 32 நாட்களில், 1 கோடியே, 55 லட்சத்து, 72 ஆயிரத்து, 939 ரூபாய் ரொக்கம், 60 கிராம் தங்கம், 660 கிலோ வெள்ளி, 176 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன.மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாகி ராமசாமி தெரிவித்தார்.