பதிவு செய்த நாள்
02
ஆக
2019
02:08
செங்கல்பட்டு:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 48ம் ஆண்டு, ஆடிப்பூரப் பெருவிழா, இன்று (ஆக., 2ல்) நடைபெறுகிறது.
அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசை முழங்க, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷே கம் நடைபெறுகிறது. காலை, 9:00 மணிக்கு, பங்காரு அடிகளாருக்கு, பக்தர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், முன்னிலை வகிக்கின்றனர். மாலை, 4:00 மணிக்கு, கலசவிளக்கு வேள்வி பூஜையை, ஆதி பராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் துவக்குகிறார்.தொடர்ந்து, 3ம் தேதி அதிகாலை, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகத்துடன், கஞ்சி வரவேற்பு நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு, சுயம்பு அன்னைக்கு, பங்காரு அடிகளார், பாலபிஷேகம் செய்கிறார். 4ம் தேதியும், பாலாபிஷேகம் நடைபெறும்.மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் நின்று செல்லும் என, ரயில்வே அறிவித்துள்ளது. தவிர, மேல்மருவத்துா ருக்கு, அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சித்தர் சக்தி பீடத்தினர் செய்கின்றனர்.