சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் நாராயணன், மூர்த்தி, கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மன்ற பூசகர் சிவஞான அடிகள் தலைமையில் அகவல் பாராயணம் நடந்தது.விழா அமைப்பாளர் முத்துகருப்பன் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் லட்சுமிபதி, தீதும், நன்றும் தலைப்பில் பேசினார். அரிமா மாவட்ட தலைவர் ஜனனி, வேலு, நடராஜன், ரோட்டரி செயலர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.