திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லிஅம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலை ஆடிப்பூரத்திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. சிநேகவல்லி அம்மன் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மாலை 5:30 மணிக்கு நிலையை அடைந்தது. நாளை தீர்த்தோற்ஸவம், யாக கும்பாபிஷேகமும், மறுநாள் அம்பாள் தவசும், ஆக.5ல் திருக்கல்யாணமும், 7ல் சுந்தரர்கயிலாய காட்சிநடக்கிறது.
*நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் நேற்று காலை 8:30 மணிக்கு மேல் சவுந்தர்யநாயகி அம்மன் தேரில் எழுந்தருளினார்.தொடர்ந்து நான்கு மாடவீதிகளில் சக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக விநாயகர்தனித்தேரில் வலம் வந்தார்.ஆக., 4ல் அம்மன் தபசு திருக்கோலம், சுவாமி - அம்மன் மாலை மாற்றல் வைபவம் நடக்கிறது. ஆக., 5 காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் நாகநாதசுவாமி - சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம்நடக்கிறது. இரவு திருமண திருக்கோலத்தில் சுவாமி, அம்மன் தனித்தனியாக தேரில் வலம் வருகின்றனர்.