பதிவு செய்த நாள்
03
ஆக
2019
02:08
அயப்பாக்கம்:அயப்பாக்கம், நாகாத்தம்மன் கோவிலில், ஆடி கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று (ஆக., 2ல்) துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அம்பத்துார், அயப்பாக்கத்தில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வேம்பு மரம், மண்புற்று தானாக உருவாகி, நாகாத்தம்மன் அருள்பாலிப்பதாக, பக்தர்கள் வழிபட்டு வரு கின்றனர். நேற்று (ஆக., 2ல்) , 18ம் ஆண்டு, ஆடி கூழ்வார்த்தல் திருவிழா துவங்கியது. காலை, 9:00 மணியளவில், திரளான பக்தர்கள், பால்குடம் எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணியளவில், காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது.
அதைத்தொடர்ந்து, இன்னிசை கச்சேரி, கரகம்ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், அயப்பாக்கம், அம்பத்துார், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.இன்று (ஆக., 3ல்) காலை, 8:00 மணிக்கு கரகம் ஊர்வலம், 12:00 மணிக்கு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நாளை (ஆக., 4ல்) இரவு, 8:00 மணிக்கு, நாகாத்தம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.