கடலுார் பிரபாவதி விஷ்ணு துர்க்கை கோவிலில் நவசண்டி மகா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2019 02:08
கடலுார்: கடலுார் மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே.எஸ்டேட் ராசித்தோட்டத்தில் உள்ள பிரபாவதி விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில், 2 நாள் நவசண்டி மகாயாகம் நடந்தது.தினமும் மாலை 5:00 மணிக்கு தேவதா அனுக்ஞை , விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று (ஆக., 2ல்) காலை 7:30 மணிக்கு யாகம் துவங்கி, பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது.
பூஜைகளை அகோரமூர்த்தி, மணிகண்டன் குருக்கள் செய்திருந்தனர். யாகத்திற்கான ஏற்பாடு களை ஜி.ஆர்.கே. எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோமதி துரைராஜ், கோகுல் ராதா கிருஷ்ணன் மற்றும் சக்ராலயா மோட்டார்ஸ், சங்காலயா மோட்டார்ஸ் அலுவலர்கள் செய்தி ருந்தனர். பிரபாவதி விஷ்ணு துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.