பதிவு செய்த நாள்
03
ஆக
2019
02:08
திருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, அணைக்காடு ஸ்ரீமாரியம்மன் கோவிலில், அம்மன் ஆதி அத்திவரதர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஆடி மாதம் என்றாலே, அம்மன் கோவில் களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமங்கலிகள் விரதம் இருந்து, அம்மனை வழி பட்டு, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஆடிமாத மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று (ஆக., 2ல்), திருப்பூர், அவிநாசி, பல்லடம், மங்கலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு களைகட்டியது.
அணைக்காடு மாரியம்மன் கோவிலில், அபிஷேக பூஜைகளை தொடர்ந்து, ஸ்ரீஅத்திவரதர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அம்மனை வழிபட வந்த பக்தர்கள், இன்ப அதிர்ச்சி யுடன், அத்திவரதராக அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.
பாளையக்காடு சக்தி ஸ்ரீமாரியம்மன், கவுண்டநாயக்கன்பாளையம் நாகாத்தம்மன் கோவில், கோல்டன்நகர் தங்கமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஓலப்பாளையம் ராம லிங்கசவுடேஸ்வரி அம்மன் கோவிலில், புத்துக்கண் மாரியம்மன் அலங்காரம் நடை பெற்றது. காங்கயம் ரோடு, குமாரசாமி காலனி குன்னி நாகேஸ்வரி கோவில்; வாய்க்கால் மேடு, காமாட்சியம்மன் கோவில், கொங்கு மெயின் ரோடு அம்மன் கோவிலில் சிவதுர்க்கை அம்மன் அலங்காரம் என, பல்வேறு வகை சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன.