தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல்மாதா ஆலய தேர்பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2019 04:08
திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா ஆலய திரு விழா ஜூலை 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (ஆக., 1ல்) இரவு 10:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.
புனித செங்கோல் மாதா, அந்தோணியார், செபஸ்தியார் ஆகிய தேர்கள் முக்கிய வீதிகள் வழி யாக சென்று இரவு 12:00 மணிக்கு நிலையை சென்றடைந்தது. முன்னதாக பாதிரியார் சாமிநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.காரங்காடு, தொண்டி, புதுப்பட்டினம், மணக்குடி மற்றும் பல கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று (ஆக., 2ல்) மாலை கொடியிறக்கம் நடந்தது.