பழநி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2019 05:08
பழநி:ஆடிவெள்ளியை முன்னிட்டு, பழநியில் உள்ள அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 10 வரை தினசரி மாலை யில் நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை நடக்கிறது. ஆகஸ்ட் 11ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று ஆகஸ்ட் 2ல் மூன்றாம் ஆடிவெள்ளியை முன்னிட்டு, பெரியநாயகியம்மனுக்கு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது.
திருஆவினன்குடி துர்கையம்மன், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, அடிவாரம் இட்டேரி ரோடு அரசமரம் சப்பாணி காளியம்மன் கோயில், காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணி, கைலாசநாதர் கோயிலில் லட்சார்ச்சனை, மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.