திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.
ஆடிப்பூர உற்ஸவ விழா ஜூலை 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி, அம்பாள் காலை, இரவில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் 9ம் நாளான நேற்று காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நேற்று மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதிகளை சுற்றி, மாலை 6:30 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று காலை திருப்பாற்கடலில் தீர்த்தவாரி, இரவு தங்க பல்லக்கு ஆஸ்தானத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள்வர். கோயில் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.