பதிவு செய்த நாள்
05
ஆக
2019
03:08
செஞ்சி:செஞ்சி தாலுகா கொளத்தூர் கிராமத்தில் உள்ள சப்த கன்னிமார், கிராம தேவதை கோயில்கள் திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டு பெருவிழா 7-ம் தேதி நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு நாளை (6 ம் தேதி) மாலை 4 மணிக்கு திருவிளக்கு, புனித நீர், பிள்ளை யார்,திருமகள், நிலத்தேவர் வழிபாடு, புற்று மண் எடுத்தல், காப்பு அணிவித்தல் ஆகியனவும், இரவு 7 மணிக்கு மூர்த்திகள் திருக்குடங்களை இடமாகக் கொண்டு வேள்வி சாலைக்குள் எழுந்தருளச் செய்தல், இரவு 8 மணிக்கு கன்னிமார் விநாயகர், முருகர், கிராம தேவதை களுக்கு முதல் கால வேள்வியும், இரவு 10 மணிக்கு திருவுருவச்சிலைகளை என்வகை மருந்து சாற்றி நிறுவுதல், கோபுர கலசம் நிறுவுதல் ஆகியன செய்ய உள்ளனர்.7 ம் தேதி காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், காப்பு அணிவித்தலும், 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 8 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கன்னிமார் கோபுரம், மூலவர் நன்னீராட்டு, விநாயகர், முருகர், மூலவர் பரிவாரமூர்த்திகள் நன்னீராட்டு நடைபெற உள்ளது, காலை 10 மணிக்கு திருமஞ்சனம் பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது