திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங் களில் 44 வதாக திகழ்கிறது. ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, கோயிலில் தனி சன்னதியாக உள்ள மூலவர் ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி, பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. கோயில் பட்டாச்சாரியார்களால் நாலா யிர திவ்யபிரபந்தப்பாடல்கள், திருப்பாவை உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. நேற்று (ஆக., 4ல்) இரவு 7:00 மணியளவில் ஊஞ்சல் சேவை நடந்தது. பிரகார உள்வீதியுலா புறப்பாடும் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.