கீழக்கரை:தமிழ்நாடு அரசு தலைமை காஜியாரின் அறிவிப்பின்படி கடந்த ஆக. 2 அன்று மாலை ஹிஜ்ரி 1440, துல்ஹஜ் பிறை தென்பட்டதால், ஆக., 3 (சனிக்கிழமை) துல்ஹஜ் பிறை 1 எனவும் வருகிற பிறை 10 அன்று ஆக. 12 (திங்கள் கிழமை) அன்று ’ஈதுல் அள்ஹா’ ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும், என கீழக்கரை டவுன் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் உசேன் சித்திகீ தெரிவித்தார்.-