பதிவு செய்த நாள்
05
ஆக
2019
05:08
அன்னுார்:ஆடிப்பூர விழா அன்னுார் வட்டாரத்தில் நேற்று (ஆக., 4ல்) நடந்தது. ஆடி மாத பூரம் நட்சத்திரம், ஆண்டாள் பிறந்த நட்சத்திரம். இதையொட்டி, அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று (ஆக., 4ல்) ஆண்டாள் உற்சவம் நடந்தது.
ஆண்டாளுக்கு, பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. சுவாமி உட்பிரகார உலா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னுார், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று (ஆக., 4ல்)ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பக்தர்கள் கருவறைக்குள் சென்று தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்தனர். சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.