பதிவு செய்த நாள்
05
ஆக
2019
05:08
மதுரை:சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்திரி பூஜையை முன்னிட்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் துாய்மைப்பணி நடக்கவுள்ளது.
புத்திரி பூஜையை முன்னிட்டு நாளை (ஆக.,6) மற்றும் ஆக., 7 ஆகிய நாட்களில் அச்சன் கோயில், கொல்லங்கோடு பகுதியில் இருந்து வரும் நெற்கதிர்கள் திருவிதாங்கூர் தேவஸ் தான அதிகாரிகள் மூலம் சபரிமலை கொண்டு செல்லப்படும். விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டி ’நிறை புத்திரி பூஜை’ நடத்தி பக்தர்களுக்கு வழங்கப்படும். அன்று இரவு கோயில் நடை அடைக்கப்படும்.
அன்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் துாய்மைப்பணி நடக்க உள்ளது. இதற்காக மதுரையில் இருந்து நாளை (ஆக.,6) இரண்டு பஸ்கள், மூன்று வேன்களில் 170 தொண்டர்கள் புறப்படுகின்றனர். எரிமேலி, சன்னிதானம், மாளிகைபுரத்து அம்மன் கோயில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, நீலிமலை கணபதி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மைப் பணியில் ஈடுபடுவர், என மாநில தலைவர் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளனர்.