பதிவு செய்த நாள்
06
ஆக
2019
12:08
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் திருக்கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக் கல்யாண விழா ஜூலை 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 12ம் நாளில் ஆடித் திருக் கல்யாண விழாவையொட்டி நேற்று (ஆக., 5ல்) இரவு கோயில் கல்யாண மண்டபத்தில் அலங்கரித்த மேடையில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.
பின் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க இரவு 8:00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்து ஆடித் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாத பாக்கெட் வழங்கினர். விழாவில் கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், ராமநாதபுரம் திருமுருகன், இந்து முன்னணி மாவட்ட செயலர் குருசர்மா, அ.தி.மு.க., நிர்வாகி தங்கச்சிமடம் பாலு, ராமஸ்வரம் கூட்டுறவு வீடு வசதி சங்க துணை தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.