பதிவு செய்த நாள்
06
ஆக
2019
03:08
ஈரோடு: ”ஈரோடு மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்திக்காக, 1,400 சிலைகள் தயார் செய்யும் பணி நடக்கிறது,” என, இந்து முன்னணி மாநில துணை தலைவர் பூசப்பன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா, நடப்பாண்டு செப்.,2ல் நடக்கிறது. விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஈரோடு மாவட்ட அளவில், 1,400 விநாயகர் சிலைகள் செய்வதற்கான பணிகள், பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. வழக்கம்போல், ஈரோடு சம்பத் நகரில், பிரமாண்ட சிலை வைத்து, தினமும் வழிபாடு நடத்தப்படும்.
அறநிலையத்துறை அதிகாரிகள் செய்த தவறு, தினமும் வெளிவருவதால், ஆறு மாதத்துக்கு மேலாக, எந்த கோவிலுக்கும் கும்பாபிஷேகம், திருப்பணி செய்ய அனுமதி வழங்க மறுக் கின்றனர்.
ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில், 40 ஆண்டாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. ஈரோடு ஈஸ்வரன் கோவிலிலும், கும்பாபிஷேக திருப்பணிக்கு அனுமதி வழங்காமல் உள்ளனர். விரைவில் இப்பிரச்னையை தீர்க்க போராட்டங்களை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.