பதிவு செய்த நாள்
06
ஆக
2019
03:08
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, கபிலர்மலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. விசேஷ தினங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் திரளாக வந்து நேர்த்திக்கடனை நிறைவேற் றுவர். காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவர்.
ஆண்டுக்கு இருமுறை உண்டியலை திறந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கணக்கெடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று (ஆக., 5ல்) உண்டியல் திறக்கப்பட்டு, காணிக் கைகளை எண்ணும் பணியில், அரசுப்பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து 545 ரூபாய், 189 கிராம் வெள்ளி, 15 கிராம் தங்கம் இருந்ததாக, அதிகாரிகள் கூறினர். இப்பணியை, உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் கலைவாணி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.