ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்த்து, அதனை திருவிளக்கின் முன் வைத்து சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பூக்களை தூவி அம்பிகை அல்லது லட்சுமிக்குரிய 108 போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும். தீபாராதனை செய்து கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வணங்க வேண்டும். தீர்த்தத்தை கால்மிதி படாமல் மரம், செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.