நாடு செழிக்க, புனிதமான நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னோர்கள் ஏற்படுத்தினர். காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், பூக்களை ஆற்றில் விடுவர். திருமணம் முடிந்த மூன்றாம் மாதம், பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு மாற்றுவர். இதற்கு ’தாலி பெருக்குதல்’ என பெயர். வைகாசியில் திருமணம் முடிந்தவர்களுக்கு மூன்றாம் மாதம் ஆடி. அவர்கள் பெருக்கன்று இச்சடங்கைச் நடத்துவதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறுவர்.