ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் சாலையில் நடுக்கரை என்ற இடத்தில் உள்ளது இந்த அன்னையின் கோயில். இங்கு கருவறையில் அருள் பாலிக்கும் அன்னை பிரத்யங்கரா தேவியின் திருமேனி, அத்தி மரத்தால் உரு வானது. அன்னைக்கு எண்ணெய் மற்றும் பிற அபிஷேகங்கள் கிடையாது. அன்னையின் முகத்திற்கு புனுகு சட்டமும், திருமேனிக்கு சாம்பிராணித் தைலமும் சாத்துகிறார்கள்.