கும்பகோணத்திற்குக் கிழக்கே 15 கி.மீ.யில் உள்ள கீழச் சூரிய மூலையில் அருள்பாலி க்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர்; இறைவி பவளக்கொடி இங்கு கோஷ்டத்தில் உள்ள துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. இந்த துர்க்கை தனது ஒரு காலை மட்டும் முன் நோக்கி வைத்துள்ளாள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை இவள் எழுந்து வந்து வரவேற்பதாக ஐதிகம்.