திருப்புத்துார் மழைநீர் சேமிக்கும் வற்றாத பெருமாள் கோயில் தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2019 02:08
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் அருகே வைரவன்பட்டியில் உள்ள பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் சேமிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் வற்றாத குளமாக உள்ளது.
திருக்கோஷ்டியூர் அருகிலுள்ள தி. வைரவன்பட்டியில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தெப்பக்குளம் உள்ளது.
மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்ஸவத்தன்று இக்குளத்தில் தெப்பம் நடைபெறும். அதை முன்னிட்டு இக்குளத்தில் நீர் நிரம்பும்படி கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது.
மழை காலங்களில் பணியாட்களை நியமித்து வயல்களில் தேங்கி உள்ள பயன்படுத்தாத மழை நீரை வடிகால் மூலம் குளத்திற்கு திருப்பி விடுகின்றனர். கிராமத்தினரும்மழைநீரை வடிகால் வெட்டி குளத்திற்கு அனுப்புகின்றனர். இதைத் தவிர்த்து கோயில், ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு தண்ணீரும் நிரப்பப்படுகிறது. எம்.பி.,திட்டத்தின் கீழ் மேலும்ஒரு ஆழ் குழாய் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் நிரம்பி ரம்யமாக காட்சி அளிக்கிறது.
இதனால் சுற்று வட்டாரக் கிராமத்தினர் மட்டும் அல்லாதுதிருப்புத்துாரிலிருந்தும் சென்று அங்கு குளிப்பதை பலரும் தினசரி வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நீரை பாதுகாக்க வாகனங்கள் கழுவவோ, மீன் வளர்க்கவோ நிர்வாகம் அனுமதிப்பதில்லை. குளத்தில் மழைநீர் சேமிப்பிற்குஎடுத்துக்காட்டாக இத்தெப்பக்குளம் வற்றாத குளமாக விளங்குகிறது. இருப்பினும் விழாக் காலங்களில் ஏற்றப்பட்ட தீபங்களின் மிச்சங்கள் சிறிதளவு தேங்கியுள்ளதையும் அகற்ற பொதுமக்கள் கோரியுள்ளன