கம்மாபுரம் சாகை முத்துமாரியம்மன் கோவிலில் வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 01:08
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஊ.கொளப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திரு விழா, கடந்த 29ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தினசரி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் (ஆக., 6ல்)பகல் 1:00 மணியளவில் குளத்திலிருந்து ஏராளமானோர் செடலணிந்து, பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று, நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று (ஆக., 7ல்) காலை 9:00 மணியளவில் மஞ்சள்நீர் உற்சவமும், மாலை 5:00 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.