பதிவு செய்த நாள்
08
ஆக
2019
03:08
சத்தியமங்கலம்: சத்தியில் இருந்து, அத்திவரதரை தரிசனம் செய்ய செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள், அனுமதி பெறுவது குறித்து முன்னறிவிப்பு கூட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள, அத்தி வரதரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
தினமும் கூட்டம் அதிகரித்து வருவதால், அசம்பாவித சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலை யில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில், சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டம் நேற்று (ஆக., 7ல்) மதியம் நடந்தது இக்கூட்டத்தில், அத்திரவரதர் கோவிலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், காவல் நிலையத்தில் உரிய அனுமதி பெற்ற பின்னரே, காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டது. சத்தியமங்கலம் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர்கள், சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், சுற்றுலா வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.