பதிவு செய்த நாள்
08
ஆக
2019
03:08
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அளே தர்மபுரியில், சக்தி மாரியம்மன் கோவில் ஊர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (ஆக., 7ல்), கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஆக., 6ல்) காலை, 6:00 மணிக்கு, கங்கணம் கட்டுதல், முதல்கால யாக பூஜை மற்றும், கணபதி ஹோமம் நடந்தது. நேற்று (ஆக., 7ல்) பகல், 11:00 மணிக்கு மேல், கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, கூழ் குடங்களை தலை யில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர்.
பின் கோவிலில் வைத்திருந்த பெரிய கொப்பரையில், அவர்கள் கொண்டு வந்த கூழை ஊற்றி னர். பகல், 12:00 மணிக்கு மேல், சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பின், படையல் கூழுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப் பட்டது. இன்று 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு, கொடியிறக்கம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.