பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிபிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் மோகினி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிவலம் வந்தார். முன்னதாக நேற்று முன் தினம் காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து10 நாட்களுக்கு பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வருவார்.