திருச்சியில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2019 01:08
திருச்சி: திருச்சியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ல், கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், திருச்சியில் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில், போலீஸ் அனுமதி பெறுவது உள்ளிட்டவைகளை எளிமையாக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலாளர் போஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.