பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
அந்தியூர்: குருநாதசுவாமி கோவில் விழாவில், போலி ரசீது அடித்து, பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தியூர், புதுப்பாளையம், குருநாதசுவாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் (ஆக., 7ல்) கோலாகலமாக தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களின் வாகனங்களை நிறுத்த, உரிய ஏற்பாடு செய்யப்பட்டு, இடமும் அறிவிக்கப் பட்டுள்ளது. டூவீலர்களுக்கு, 10 ரூபாய், கார், டெம்போ, வேன்களுக்கு, 40 ரூபாய் வரை பார்க் கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கேல்பாளையம் பஞ்., படுவக்காடு பகுதி, சங்கராபாளையம் பஞ்., வனக்கோவில் பின்புறம், ஐயந்தோட்டம் பகுதி யில், வாகனம் நிறுத்த ஏலம் எடுத்தவர்கள், கூடுதல் தொகை வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாகனங்களுக்கு, 10 ரூபாய் கூடுதலாக சேர்த்து, 50 ரூபாய் என, இவர்களே ரசீது அடித்து வசூலிப்பதாக, புகார் கிளம்பியுள்ளது. வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.