கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் பெருவிழா நேற்று துவங்கியது.
இதையொட்டி, நேற்று காலை 10:45 மணிக்கு கொடியற்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்களுக்கு மகோற்சவம் நடக்கிறது. வரும் 16ம் தேதி நடைபெறும் ஒன்பதாம் நாள் விழாவில் செடல் உற்சவம், 17 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 23ம் தேதி உதரவாய் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா, இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, வாண வேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வேல்விழி, தக்கார் சுபத்ரா மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.