பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது. கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 348ம் ஆண்டு ஆராதனை விழா, வரும் 16ம் தேதி முதல், 18ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினங்களில் தினமும் காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, பகல் 12:00 மணிக்கு அலங்காரம், இரவு 8:30 மணிக்கு பல மந்த்ராட்சதை நடக்கிறது. ஆராதனை விழாவிற்கு பச்சரிசி, பருப்பு, வெல்லம், பால், நெய், தேன், அபிஷேக திரவியங்கள் வரவேற்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.