உளுந்துார்பேட்டை: எம்.குன்னத்துார் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்மன் அய்யனார் திருவிழாவையொட்டி சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 7ம் தேதி இரவு ஒரு மணியளவில் கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் அம்மன் அய்யனாரை அலங்கரித்து ஊருக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். நேற்று முன் தினம் இரவு தீபாராதனையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 14ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.