சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மழுவேந்திகருப்பர் கோயில் ஆடிக்களரி விழாவை முன்னிட்டு சாமியாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி அருகேயுள்ள பிள்ளையார்பட்டி மழுவேந்திகருப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்களரி படைப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பக்தர்கள் பிள்ளையார்பட்டியில் இருந்து சாமி அழைக்கப்பட்டுசாமியாடி 6 அடி நீளம் கொண்ட கூர்மையான இரண்டு அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியும், பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கோவில்பெட்டி மற்றும் சாமி ஆயுதங்களுடன் கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, சிங்கம்புணரி பெரியகடை வீதி வழியாக 8 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கம்புணரி கீழத்தெருவில் அமைந்திருக்கும் மழுவேந்திகருப்பர் கோயிலை வந்தடைந்தனர். அங்கு சாமியாட்டம் மற்றும் நள்ளிரவில் கிடா வெட்டி ஆடிக்களரி திருவிழா கொண்டாடப்பட்டது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.