காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தின் 41 வது நாளான இன்று (ஆக.,10), அத்திவரதசர் வெள்ளை மற்றும் வெளிர் சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தருகிறார். அத்திவரதர் வைபவம் நிறைவடைய இன்னும் 6 நாட்களே உள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.