மேலுார், மேலுார் அருகே பெரியசூரக்குண்டு காளி கருப்பு கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். இவ்விழாவிற்காக ஆடி 1 முதல் பக்தர்கள் காப்பு கட்டி 23 நாட்கள் விரதமிருந்தனர். நேற்று கோயில் வீட்டிலிருந்து ஒரு கி.மீ., துாரத்திலுள்ள கோயிலுக்கு பொங்கல் பொருட்களை ஓலை பெட்டியில் சுமந்து சென்றனர். அங்கிருந்து பெண்கள் மண்பானையுடன் அரை கி.மீ., துாரத்திலுள்ள தெய்வானை ஊருணிக்கு சென்று பொங்கல் வைக்க தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.