வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி அதிகாலையில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. கருடகொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆச்சாரியார்கள் மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் சங்கல்ப பூஜைகளும் நடந்தது. உற்சவருக்கு திருமஞ்சனம் வழிபாடும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. மாலையில் சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.