பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
ஈரோடு: ஆடி நான்காம் வெள்ளியையொட்டி, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி வெள்ளியில் வழிபாடு நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஈரோடு மாநகரில் உள்ள, பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத் திரம் மாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன், திருவள்ளுவர் வீதி பொட்டு அம்மன், கள்ளுக் கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன், சின்னசேமூர் மஹாமாரியம்மன், கோட்டை வாரணாம்பிகையம்மன் உள்ளிட்ட நகரில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கோவில் களில் நேற்று (ஆக., 9ல்) காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அம்மன், சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்னசேமூர் மஹா மாரியம்மன் வெற்றிலைக்காரி அலங்காரத்திலும், ஈரோடு கோட்டை ஆருத்ர காபாலீஸ்வரர் கோவிலில், வாராணம்பிகை சன்னதியில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. கேழ்வரகு கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டது.
* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில், பவானி, வர்ணாபுரம் சமயபுரம் மாரியம்மன், மூன்று லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதே போல் வேம்பத்தி சொக்கநாச்சியம்மன், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர்.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், ஏராளான பக்தர்கள் நேற்று (ஆக., 9ல்) காலை முதல் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், ஏராளமான பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல், மொடச்சூர் தான்தோன்றியம் மன், கோபி சாரதா மாரியம்மன் கோவில், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில் களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.