Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் ... செல்வவெட்காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் செல்வவெட்காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதர் நீராழி மண்டபம் புதுப்பிக்க முடிவு
எழுத்தின் அளவு:
அத்தி வரதர் நீராழி மண்டபம் புதுப்பிக்க முடிவு

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
04:08

 காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் எழுந்தருளும் நீராழி மண்டபத்தை, பழைமை மாறாமல், புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் வளாக அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் எழுந்தருளியிருந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து, சிறப்பு வழிபாடு நடைபெறும் வைபவம், ஜூலை 1ம் தேதியில் இருந்து,  வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.கடந்த, 31 நாட்கள், சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர், ஆக. 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.தினசரி பெருமாளை தரிசிக்க லட்கக்கணக்கானோர்  வந்து செல்கின்றனர்.கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் வீற்றியிருக்கும் மண்டபத்தை, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில், ஹிந்து அறநிலையத் துறை திருப்பணி கூடுதல் ஆணையர் வான்மதி தலைமையில், தொல்லியல் துறை வல்லுனர்கள், அறநிலையத் துறை ஸ்தபதி, பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.சில தினங்களில், அந்த நீராழி மண்டபத்தை பழைமை மாறாமல்,  புதுப்பிக்கும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இணை ஆணையர் செந்தில்வேலவன், செயல் அலுவலர்கள், தியாகராஜன், குமரன், வெள்ளைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
கலெக்டர், டோஸ்

வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட, பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.அந்த வழியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர், பாஸ் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு, பலரை உள்ளே செல்ல அனுப்பியுள்ளார்.அந்த  நேரத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அங்கு சென்று பார்த்து, கண்டு பிடித்தார். எவ்வளவு பேர் காத்திருக்கின்றனர் என, சத்தம் போட்டார்.பின், ஐ.ஜி.,யிடம் சொல்லி, அந்த ஆய்வாளரை, தாற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என, கூறினார். அதன் பின்,  பாஸ் இல்லாமல் செல்வது குறைந்தது.ஆனால், கலெக்டர் சென்ற சில மணி நேரத்தில், வழக்கம் போல் பழைய நிலையே ஏற்பட்டது.இதையெல்லாம், போலீசார் நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது

வி.வி.ஐ.பி., பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு: காஞ்சி அத்தி வரதர் தரிசனத்தில், வி.வி.ஐ.பி., வழியில். நான்கு மணி நேரமும். பொது தரிசனத்தில், 10 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதுவரை அத்தி வரதரை, 80 லட்சத்திற்கும்  அதிகமானோர், தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து விடுமுறை வருவதால், இன்னும் கூட்டம் அதிகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை சமாளிக்க, அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.பாஸ் பெறுவதற்காக, கலெக்டர்  அலுவலகத்தில், தினசரி ஏராளமானோர் காத்திருப்பதால், பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கலெக்டர் வீட்டுக்கு சென்று, வெளியில் நிறைய பேர் காத்திருப்பதால், அங்கு, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar