உளுந்தூர்பேட்டை: மூலசமுத்திரம் ஸ்ரீ செல்வவெட்காளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழித்து வளரவும் பால் அபிஷேகம் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வவெட்காளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழித்து வளரவும் பால் அபிஷேகம் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் பால்குட ஊர்வலத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பால்குட ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. கோவில் அர்ச்சகர் தாயுமானவன் சிறப்பு பூஜைகளை செய்தார். மாலை 4 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி தீமித்து வழிபட்டனர்.