பதிவு செய்த நாள்
12
ஆக
2019
01:08
வாலாஜாபாத்:வாலாஜாபாத், அருந்ததியர் தெருவில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நடைபெறுகிறது.நடப்பாண்டு, ஆடித்திருவிழாவை முன்னிட்டு, 9ம் தேதி காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன் தினம் (ஆக., 10ல்) காலை, சிறப்பு அபிஷேகமும், இரவு, முத்தாலம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.
அதை தொடர்ந்து, நேற்று (ஆக., 11ல்) காலை, கரகம் புறப்பாடு மற்றும் பகல், 1:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.