பதிவு செய்த நாள்
12
ஆக
2019
01:08
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கோவிலில், ஆடிப்பூர பெருவிழா, நேற்று (ஆக., 11ல்) நடைபெற்றது.செங்கல்பட்டு, சின்ன மேலமையூர் பிள்ளையார் கோவில் தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கோவில் உள்ளது.
இக்கோவிலில், செங்கல்பட்டு மண்டல வழிபாட்டு மன்றங்கள் சார்பில், ஆடிப்பூர பெரு விழாவையொட்டி, நேற்று (ஆக., 11ல்) காலை, 4:30 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள, கடும்பாடி அம்மன் கோவி லிருந்து, கஞ்சி கலயம் மற்றும் பால்குட ஊர்வலத்தை, நிர்வாகி சீனுவாசன் துவக்கி வைத்தார். அண்ணாசாலை, பெரியமணியக்கார தெரு உட்பட முக்கிய விதிகள் வழியாக சென்று, கோவில் அருகில், பால்குட ஊர்வலம் நிறைவடைந்தது. அதன் பின், கஞ்சியை படைத்தனர்.
செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.விழா ஏற்பாடு களை, செங்கல்பட்டு சக்திபீடம் மற்றும் பெருவட்ட அனைத்து வழிபாட்டு மன்றங்களைச் சேர்ந்தோர் செய்தனர்.