பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
திண்டிவனம்: உலக நன்மைக்காக மழை வேண்டி, திண்டிவனத்தில் சிவனடியார்கள், சித்தர் களின் ஜீவசமாதிகளுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.திண்டிவனம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் சித்தர்கள், ரிஷிகள் மற்றும் மாமுனிகள் வாழ்ந்து வரங்களை பெற்றதாக புராணங்கள் கூறுகிறது.
அதன்படி கிராமங்களில் அமைந்துள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு, உலக நன்மைக்காக மழை வேண்டி, திண்டிவனத்தில் சிவனடியார்கள் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். இதை யொட்டி நேற்று 11ல், காலை 5:30 மணிக்கு திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் வளாக த்தில் துவங்கிய ஆன்மீக பயணத்தை, சிவஸ்ரீ ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமி துவக்க வைத்தார். இதன் தொடர்ச்சியாக கோட்டைமேடு ஸ்ரீலஸ்ரீ நீலகண்ட சுவாமி, சந்திரசேகர சுவாமிகள், வண்டிமேடு வீரபிரம்மேந்திர சித்தர், சாரம் மகான் ஸ்ரீ முத்துராம பிரம்மம், ஒலக்கூர் பள்ளிப் பாக்கம் எறும்பு சித்தர் உள்ளிட்ட ஜீவசமாதிகளுக்கு ஊர்வலமாக சென்றனர்.
சித்தர்களின் ஜீவசமாதிகளிலும் தீபம் ஏற்றி, வழிபட்டனர்.. இரவு 7:30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மவுன சாது சித்தர் சமாதியை வந்தடைந்தனர்.ஆன்மிக பயணத்தில், திண்டிவனம், மரக் காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள், பக்தர் கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டிவனம் சிவனே சித்தன் குழு வினர் செய்திருந்தனர்.