அவிநாசி :அவிநாசியில் சாய்பாபா கோவில் திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி, கருணைபாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் கட்டப்படுகிறது. கருவறை, முன் மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய திருப்பணிகள் நிறைவுற்றுள் ளன. மற்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் ஜூன் மாதம் கும்பாபி ஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சாய்பாபா கோவில் அமைப்பு தலைவர் சாய்ரவி கூறுகையில், ""கோவில் திருப்பணி 80 சதவீதம் நிறைவுற்றுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து தருவிக்கப்பட்ட பளிங்கு கல்லினால் உருவாக்கப்பட்ட சாய்பாபா சிலைக்கு, அவிநாசி வி.எஸ். வி., காலனியில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது, என்றார்.