கீழக்கரை ஸ்ரீநகரில் பத்திரகாளியம்மன் கோயில் ஆடிப்பொங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2019 02:08
கீழக்கரை:-கீழக்கரை அருகே ஸ்ரீநகர் பத்திரகாளியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் விழா நடந்தது. ஆக.,6ல் காப்பு கட்டுதலுடன் விழாதுவங்கியது.
தினமும் மூலவர் பத்திரகாளியம்மன், விநாயகர், தர்மமுனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டி யும் 504 விளக்கு பூஜை நடந்தது.அழகன்குளம் அழகியநாயகி மன்ற பொறுப்பாளர் பிரேமா ரெத்தினம் பூஜைகளை நடத்தினார்.
பொதுநலச்சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் கோபிநாத், பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் ராமசாமி, துணைசெயலாளர் அண்ணாத்துரைஉள்பட பலர் பங்கேற்றனர். அனைவரு க்கும் தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.