கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி கொடிக்கால் தெரு சாலை அருகே, கழுவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத சிறப்பு அபிஷேகம், பூஜை நேற்று (ஆக., 11ல்) நடந்தது.
முன்னதாக லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வல மாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் ஆடு பலியிட்டு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கள்ளப்பள்ளி, லிங்கத்தூர், திம்மாச்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.